Tuesday 17 November 2015

எனது நீண்ட கால எதிர்பார்ப்படி நீ...!

முதன்முதலாய் உன்னைப்பார்க்கையில்
பறீட்சை எழுதிய சோர்ந்த முகத்தால்,
தேய்பிறை வெண்ணிலாவாய்
தோழியுடன் நிற்க....
கையில் புத்தகத்துடனும், தோளில் பையுடனும் திரும்பிய உன்னைக் கண்ட நான்,
கண்ட மாத்திரத்தில் கண்டமானேன்.
திகைத்து நான் நிற்கையில்
சின்னதாய் உன் சிரிப்பை
என் மீது நீ திருப்ப..,
அதைப் பொறுக்க திராணியற்றவனாய் திரும்பிவிட்டேன்..
நீ என்னை நோக்கி சிரிக்கவில்லை என
எனக்கும் நன்றாய்த் தெரியும்...
எனக்கு அப்போது தோன்றியது ஒன்று தான்..,
அது,
நீ உன் மார்போடு அணைத்து எடுத்துச் செல்லும்
புத்தகமாகவோ.....!
அல்லது தோளோடு தவழும் பையாகவோ.....!
நானாகக் கூடாதா என்று..,
நீ கையில் பிடித்து எழுதும் "பேனா"வைக்கேள்.....!
அது சொல்லும் பல விஷயங்களை..
உன் அழகிய கையின் ஸ்பரிசம் எத்தகைய இனிய ஒன்று.....என்று...!.
உன் இதழ் எவ்வளவு சுகம் என்று...!
பேனாவுக்கு எப்படித் தெரியும் உன் இதழின் சுவை என்கிறாயா...?
நீ யோசிக்கும் போது உன்னை அறியாமல் உதட்டில் வருடியிருப்பாயே... அப்போது...
இறைவனை வேண்டினேன்..,
உன் பேனாவுக்குக் கிடைத்த 
பெரும்பாக்கியம் எனக்கும் கிடைக்க வேண்டும் என்ற
பேராசையுடன்...

உன்னிடம் என் காதலைக் கூறி ,
அதை நீ ஏற்று...,
நீயும், நானும் ஒன்றாய் அமர்ந்து பேசிடக் கூடாதா என்றெல்லாம்
கனவும் கண்டிருக்கிறேன்.
அந்தியில் வானம் சிவக்க,
நீ பார்க்க., என் முகம் சிவக்க,
திக்குத்தெரியாமல் திக்குமுக்காடிப் போனேனடி...!
பச்சிளங்குழந்தையின் அழகுச்சிரிப்பும் தோற்றது..,
உன் கள்ளச்சிரிப்பின் முன்.....!!!
தாயை இழந்த எனக்குத் தாயாய்...
தங்கை இல்லாத எனக்குத் தங்கையாய்...
தாரத்திற்கு தாரமாய் நீ வருவாயா...?
இப்படிக்கு,
உனக்காய், உனதுயிராய்
என்றும் நான்

1 comment: