Monday 4 January 2016

தமிழகத்தின் சொத்து தாமிரபரணி 14 - {நமது தாமிரபரணி நதியின் வரலாறு மற்றும் அதன் அழிவுப்பாதை பற்றிய தொடர் }

முந்தைய பாகம்-13 ற்கு லிங்க்
 
http://gowthamthamizhan.blogspot.in/2015/12/13.html
 
தொடர்-14


தண்ணீர் உறிஞ்சும் ஆலைகள்

தொழிற்சாலைகளை தவிர கங்கைகொண்டான் சிப்காட் வளா கத்தில் இரு குளிர்பான ஆலைகளும் தாமிரபரணியில் இருந்து பெருமளவு தண் ணீரை உறிஞ்சுகின்றன. சிப்காட் தொழிற் சாலைகளுக்காக சீவலப்பேரி அருகேயிருந்து தினமும் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்த வளாகத்தின் தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி நீர் ஆதாரத்தை பயன்படுத்தி தொழில் தொடங்க அனுமதி இல்லை என்று சொல்லப்படும் நிலையில், 2004-ம் ஆண்டு முதல் அங்கு ஒரு குளிர்பான நிறுவனத்துக்கு 1,000 லிட்டர் தண்ணீர் ரூ. 40 என தினமும் இரண்டு லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்னொரு குளிர் பான ஆலைக்கும் அங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் 7.5 லட்சம் லிட்டர் தண் ணீர் உறிஞ்சப்படும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு விவசாயிகள் இடையே கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதுதொடர் பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ள நுகர்வோர் குழுக்களின் கூட்ட மைப்பு மாநில தலைவரான டி.. பிரபாகர், “இங்கு ஏழை மக்கள் குடிக்க தண்ணீர் இல்லை. ஆனால், பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் விற்று, குளிர்பானம் தயாரிக்கிறார்கள். கங்கைகொண்டான் சிப்காட்டில் செயல்பட்டு வரும் பன்னாட்டு குளிர்பான நிறுவனம், புதியதாக இன்னொரு திட்டத்துக்கு அனுமதி கோரியிருக்கிறது. மற்றொரு பன்னாட்டு நிறுவனமும் புதிதாக தனது கிளையை கங்கைகொண்டான் சிப்காட்டில் தொடங்க உள்ளது. ஏற்கெனவே கங்கை கொண்டானில் நாள் ஒன்றுக்கு 9 லட்சம் லிட்டர் தண்ணீரை அந்த நிறு வனம் பெற்று வருகிறது. தவிர, தொழிற் சாலையின் ரசாயனக் கழிவுகளால் அப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து குளிர்பான நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்என்றார்.

90 வயதிலும் ஆற்றைக் காக்க போராட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணியை பாதுகாக்க கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறார் தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதி நீர்ப் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் எஸ்.நயினார் குலசேகரன். தாமிரபரணி தண்ணீர் தொழிற்சாலைகளுக்கு விநியோகிப்பதை எதிர்த்தும், ஆற்றை காக்கவும் 10-க்கும் மேற்பட்டமுறை உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியிருக்கும் இவருக்கு வயது 90.
“23 எம்.ஜி.டி. திட்டத்தால் தூத்துக்குடியின் 46,107 ஏக்கர் நன்செய் நிலங்களுக்கு ஒரு போகத்துக்கு கூட தண்ணீர் கிடைப்பதில்லை. ஸ்ரீவைகுண்டம் அணைக்கு கீழ் தாமிரபரணி ஆற்றிலும், பிரதான கால்வாய்களிலும் தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது. குடிநீர் திட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீரும் வற்றி வருகிறது. இதுதொடர்ந்தால் கிராமப்புற பொருளாதாரம் சீர்குலையும். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்என்றார்.

பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு: படியளக்கும் அணைகள் பாதுகாக்கப்படுமா?


பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகள், கோடை மேலழகியான், நதியுண்ணி, கன்னடி யன், அரியநாயகிபுரம், பழவூர், சுத்த மல்லி, மருதூர், வைகுண்டம் ஆகிய 8 நீர்த்தேக்கங்கள், அவற்றின் கீழ் மொத்தம் 280 கி.மீ. நீளமுள்ள 11 கால்வாய்கள், 187 குளங்கள் ஆகியவற்றுக்கு நீர் தரும் அட்சய பாத்திரமாய் பிரவாகமெடுத்து ஓடு கிறது தாய் நதியான தாமிரபரணி.

பாபநாசம் அணை

தாமிரபரணி பாசனத்தில் தலை யானது பாபநாசம் அணைக்கட்டு. 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட இந்த அணையின் கொள்ளளவு 5,500 மில்லியன் கனஅடி. பாபநாசம் மலை யில் ஆங்கிலேயர் காலத்தில் 1942-ல் இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணை கட்டப்படும் முன்பு பாணதீர்த்த அருவி, கவுதலையாறு, பாம்பாறு, மயிலாறு போன்ற ஆறுகளில் இருந்து வந்த தண்ணீர் ஒன்றிணைந்து தாமிரபரணி யாக ஓடிக்கொண்டிருந்தது. அணை கட்டப்பட்டு பின்பு மேற்கண்ட ஆறுகளின் தண்ணீர் அணையில் சேகர மானது.
பாபநாசம் அணை மேலணை, கீழணை என்று இரு பிரிவாக கட்டப் பட்டுள்ளது. இரு மலைகளுக்கு இடையே கட்டப்பட்டுள்ளது மேலணை. இதில் 120 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம். 1944-ம் ஆண்டிலிருந்து மேலணையிலிருந்தும், கீழணை யிலிருந்தும் 4 யூனிட்கள் மூலம் மொத்தம் 28 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப் படுகிறது. பாபநாசம் அணையிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட் டங்களில் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மணிமுத்தாறு அணை

திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய அணைகளுள் ஒன்று மணி முத்தாறு. மேற்குத் தொடர்ச்சி மலை யின் களக்காடு பகுதியில் செங்கல்தேரி அருகே பச்சையாற்றின் பிறப்பிடத்திலிருந்து தனியாக பிரிந்து மணிமுத்தாறு அருவியாக மணிமுத்தாறு அணைக்கட்டில் வந்து விழுகிறது. இந்த ஆறு கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதன் பிறகுதான் தாமிரபரணி அகண்ட ஆறாக பெருகி ஓடுகிறது. மணி முத்தாற்றின் இன்னொரு கிளை கோதை ஆறாக கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் பாய்ந்து அரபிக் கடலில் கலக்கிறது. தாமிரபரணி ஆற்றுடன் ஒப்பிடும்போது மணிமுத்தாற் றின் தண்ணீர் அளவு மிகவும் குறைவு. மழைக் காலங்களில் இது வெள்ள நீர் வெளியேற்று ஆறாகவே இருந்து வந்தது.
எனவே, இந்த வெள்ள நீர் தாமிர பரணியில் கலந்து வீணாக கடலில் கலப்பதை தடுக்க முன்னாள் முதல் வர் காமராஜரால் கொண்டு வரப்பட்ட திட்டமே சிங்கம்பட்டி அருகே 1958-ம் ஆண்டு அமைக்கப்பட்ட மணிமுத்தாறு அணை. இது 118 அடி உச்ச நீர் மட்டத்துடன் 5,511 மில்லியன் கனஅடி கொள்ளளவுடையதாகும். அணையின் மொத்த நீளம் 3 கி.மீ.
இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் தெற்கு வீரவநல்லூர், கரிசல்பட்டி மற்றும் பச்சையாறு பாசனம் பெறாத நாங்குநேரி தாலுகாவின் வடக்குப் பகுதிகள், திசையன்விளை ஆகிய பகுதிகளில் சுமார் 65,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தவிர மேற்கண்ட பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமும் இந்த அணைதான். மணி முத்தாறு அணைக்கட்டு மற்றும் அருவி ஆகியவை சிறந்த சுற்றுலா தலமும் கூட.

சேர்வலாறு அணை


சேர்வலாறு அணை 1986-ம் ஆண்டு மின்வாரியத்தால் மின் உற்பத்திக்காக அமைக்கப்பட்டது. கொள்ளளவு 1225 மில்லியன் கன அடி. 156 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட இந்த அணையின் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் நீரை மீண்டும் பாபநாசம் கீழ் அணையில் தேக்கி, அதன் மூலம் பாசனத்துக்கு வகை செய்யப்பட்டுள் ளது. 20 மெகாவாட் மின் உற்பத்திக்கான கட்டமைப்புகள் இங்குள்ளன.

தூர்வாருதலே தலையாய பணி

தாமிரபரணி மிகப் பழமையான பாசன கட்டமைப்பைக் கொண்டது. கால் வாய்கள் அனைத்தும் தூர்ந்தும், கொள் ளளவு குறைந்தும் காணப்படுகிறது. பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு நீர்த்தேக்கங்களுக்குள் பல அடி உயரத் துக்கு சகதி நிரம்பியிருக்கிறது. 1992-ல் வந்த வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாறைகள், பெரும் மரங்கள் எல்லாம் அப்படியே அணைக்குள் கிடக்கின்றன. இதுவரை இந்த அணை தூர்வாரப்படவே இல்லை.
கால்வாய்களும் தூர்ந்திருப்பதால் தண்ணீர் கடத்தும் திறனும் குறைந் திருக்கிறது. கரைகள் சிதிலமடைந்தி ருப்பதால் நீர்க்கசிவு மூலம் ஏராள மான தண்ணீர் வீணாகிறது. தவிர, அணைகளில் நீர்மட்டத்துக்கு மேல் வளரும் கொடிப்பாசி என்னும் தாவரங் களாலும், முட்புதர்களாலும் தண்ணீர் கொள்ளளவு குறைவு ஏற்பட்டுள்ளது. நீரோட்டத்தில் தடையும், கரைகளில் சேதங்களும் கணிசமாகவே ஏற்பட்டிருக் கின்றன.
இவை தவிர, மக்கள் குப்பைகளை யும், கட்டிட இடிபாடுகளையும் கால்வாய் களில் கொட்டுவதால் நீரோட்டம் மேலும் தடைபடுகிறது. குடியிருப்பு பகுதி களில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுகளும் கால்வாய்களில் திறந்து விடப்படுகின்றன. இவை தவிர, தாமிர பரணியின் தண்ணீரால் பலன் பெறும் ஏராளமான பாசனக் குளங்களும் மேடுதட்டி, தூர்ந்து போயிருக்கின்றன.
எனவே அணைகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்களை, குளங்களை தூர்வார வேண்டும்; ஷட்டர்களை பழுது நீக்கி பாதுகாக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
 

தாமிரபரணி: மண்ணைப் பொன்னாக்கும் 8 நீர்த்தேக்கங்கள்

மருதூர் நீர்த்தேக்கம். | படம்: என்.ராஜேஷ்.

தாமிரபரணியில் ஸ்ரீவைகுண்டம் தவிர மற்ற 7 நீர்த்தேக்கங்களும் பண்டைய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டவை. அவற் றுள் மிக உயரமான நீர்த்தேக்கம் தலை யணை. இது நதியின் சமவெளிப் பகுதியின் முதலாவதாக வருகிறது.

தலையணை

தாமிரபரணி, பாபநாசம் அருவியிலிருந்து விழுந்து குறுகலான மலையிடுக்கு வழியே செல்கிறது. அம்மலையிடுக்குப் பாதை பெரிய கூழாங்கற்களாலும் பெரிய கற்பாறைகளாலும் தடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் துவாரங் கள் போடப்பட்டு அவற்றில் பனைமர கம்பங்கள் செருகப்பட்டிருக்கின்றன. இந்த குறுக்குக் கம்பங்களின் அருகே மரங்கள் நடப்பட்டிருக்கின்றன. இவ்வாறு தண்ணீர் இரு கரைகளிலுமிருந்தும் சேகரமாகி கால் வாய்க்குள் பாய்ச்சப்படுகின்றன. இதிலிருந்து பிரியும் தெற்கு, வடக்கு கோடைமேலழகியான் கால்வாய்கள் மூலம் 20 குளங்களில் நீர் சேமிக்கப்படுகிறது. இதன்மூலம் 1282 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

நதியுண்ணி

நீர்த்தேங்கங்களில் மிக பழமையானது நதி யுண்ணி நீர்த்தேக்கம். இது அம்பாசமுத்திரத் திலிருந்து 1.5 மைல் தொலைவில் உள்ளது. சிமெண்ட் பூசப்படாத பெரும் கற்களால் கட்டப்பட்டது. நதியுண்ணி என்றால் நதியை குடிப்பது என்று பொருள். இந்த நீர்த்தேக்கம் குறித்த கல்வெட்டு ஆற்றுப்படுகையில் இப்போதும் காணப்படுகிறது. நதியுண்ணி அணை கி.பி. 1759-ம் ஆண்டில் இந்தப் பகுதியை ஆண்ட கான்சாகிபுவின் அறக்கொடை யாக கட்டப்பட்டது. ஆனால், இது முதலில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது; பின்னர் கான்சாகிபு அதை செப்பனிட்டு பலப்படுத்தினார் என்று ஒரு கருத்து நிலவுகிறது. இதன்11.55 கி.மீ. நீள கால்வாய் மூலம் 1,053 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன.

கன்னடியன்

கன்னடியன் நீர்த்தேக்கம் மதுரை அரசின் பிரதிநிதியாக இருந்த கன்னட இனத்தை சேர்ந்த வரால் கட்டப்பட்டதால் இப்பெயர் வழங்கப் பெற்றிருக்கும் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு கதைகள் சொல்லப்படு கின்றன. இதன் அருகே சிறு கோயில் உள்ளது. அங்கு ஜூன் மாதம் 5-ம் தேதி உள்ளூர் தேவதைக்கு ஆண்டுதோறும் பலி கொடுக்கப் படுகின்றன. அன்றைய தினத்தில் கால்வாயில் பல சடங்குகளை செய்து தண்ணீர் திறக்கப் படுகிறது. இந்த நீர்த்தேக்கத்திலிருந்து 33.95 கி.மீ. நீளம் செல்லும் கன்னடியன் கால்வாய் 16 குளங்களுக்கு தண்ணீர் வழங்கி 5,058 ஏக்கர் நிலத்தை செழிப்பாக்குகிறது.

அரியநாயகிபுரம்

அரியநாயகிபுரம் நீர்தேக்கம், அருகில் உள்ள கிராமத்தின் பெயரால் இதற்கு அப்பெயர் வரக் காரணமாக அமைந்துவிட்டது. அரியநாயகிபுரம் அணைக்கட்டிலிருந்து பிரியும் 27 கி.மீ. நீளமுள்ள கோடகன் கால்வாய் மூலம் 2,900 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கூடவே 17 குளங்களையும் நிறைக்கிறது.

சுத்தமல்லி

சுத்தமல்லி நீர்த்தேக்கம் திருநெல்வேலி மாநகரத்தின் சுற்றுவட்டார பகுதிகளின் விவ சாயத்துக்கு தேவையான தண்ணீரை வழங்குகிறது.
இதிலிருந்து பிரியும் திருநெல் வேலி கால்வாயின் நீளம் 28.6 கி.மீ. இந்த கால்வாய் நயினார்குளம் முதல் குப்பக் குறிச்சி கிராமத்துக் குளம் வரையில் 23 குளங்களுக்கு நீர்பெருகவும் 4190 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறவும் உதவுகிறது.

பழவூர்

பழவூர் நீர்தேக்கம் பாளையங்கோட்டைக்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் தண்ணீர் தருகிறது. பழவூர் என்பது ஆற்றின் இடது கரையில் அமைந்திருக்கும் கிராமம். பழவூர் அணைக்கட்டிலிருந்து பிரியும் பாளையங் கால்வாய் 42.6 கி.மீ. நீளம் கொண்டது. இந்தக் கால்வாய் 57 குளங்களின் நீராதாரமாக இருக்கிறது. இதன் மூலம் 5,027 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்த கால்வாய் திருநெல்வேலி நகரப் பகுதியில் மட்டும் 9.6 கி.மீ. தூரம் ஓடுகிறது.

மருதூர்

தாமிரபரணியின் மற்ற நீர்த்தேக்கங்களைவிட அதிகப்படியான நெல் விளைச்சலுக்கு தேவை யான தண்ணீரை கொடுப்பது மருதூர் நீர்த் தேக்கம். பாளையங்கோட்டைக்கு அருகே யுள்ள இந்த நீர்நிலை, 1792-ல் முற்றிலும் திரும்ப கட்டப்பட்டிருக்கிறது. கல்வெட்டு கூறும் தகவலின்படி இது டோரின் என்பவர் திருநெல்வேலி ஆட்சியராக இருந்தபோது புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. கர்னல் கால்டு வெல்லினால் 1807-ல் மறுபடியும் இந்த அணைக்கட்டில் அதிகமான பணிகள் செய்யப் பட்டிருக்கின்றன. மருதூர் மேலக்கால்வாய் மூலம் 16 குளங்களில் நீர் பெருகுகிறது. 5,173 ஏக்கர் பாசனம்பெறுகின்றன. மருதூர் கீழக் கால்வாய் மூலம் 15 குளங்களில் நீர் பெருகு கிறது. 3154 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது

ஸ்ரீவைகுண்டம்

நிறைவாக வருவது ஸ்ரீவைகுண்டம் நீர்தேக்கம். தாமிரபணியில் இடம்பெற்றுள்ள வற்றில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஒரே நீர்தேக்கம் இதுதான். இந்த நீர்த்தேக்கங் களில் எல்லாம் பரா மரிப்பு பணிகளை யும், கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை யும் தொடர்ச்சியாக மேற்கொண்டால் மட்டுமே திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்ததாக அதிக நெல் விளையும் பூமி என்ற பெருமையை தொடர்ந்து தக்கவைக்க முடியும்.