Saturday 19 December 2015

தமிழகத்தின் சொத்து தாமிரபரணி 13 - {நமது தாமிரபரணி நதியின் வரலாறு மற்றும் அதன் அழிவுப்பாதை பற்றிய தொடர் }

முந்தைய பாகம்-12 ற்கு லிங்க்
 
http://gowthamthamizhan.blogspot.in/2015/12/12.html
 
தொடர்-13


தாமிரபரணியும் வெள்ளப் பெருக்கும்

தாமிரபரணி ஆற்றில் பல்வேறு காலகட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.1810-ல் ஏற்பட்ட வெள்ளத் தில் கரையோரத்தில் இருந்த ஆயிரத் துக்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. ஆழ்வார்குறிச்சியில் மட்டும் 500 வீடுகள் சேதம் அடைந்தன. உயிர்சேதமும் ஏற்பட்டது. 1827-ல் ஏற்பட்ட வெள்ளம் திருநெல்வேலி நகரை மூன்று நாட்களுக்கு தன்பிடியில் வைத்திருந்தது. வைகுண்டம் கோயிலையும் வெள்ளம் சூழ்ந்தது. மூன்று நாட்களாக சிலர் கோயில் கோபுரத்தில் ஏறி உயிர் பிழைத்தனர்.
1869-ம் ஆண்டு வெள்ளத்தில் பாலங்கள் சேதமடைந்தன. வைகுண் டம் பாலத்துக்குமேல் 5 அடி உயரத் துக்கு தண்ணீர் ஓடியது. 1874-ல் பயிர்கள் சேதமாகின. 1877-ல் டிசம்பர் 6-ம் தேதி நள்ளிரவில் திருநெல் வேலி கொக்கிரகுளம் ஆட்சியர் அலுவல கத்தை வெள்ளம் சூழ்ந்தது. அதே ஆண்டு, டிசம்பர் 17-ல் மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது. 1895 வெள்ளத்தில் தைப்பூச மண்டபத்தில் இருந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டார்கள். அவர் களில் ஒரு சிறுவன் மட்டும் உயிர் தப்பினான். கடைசியாக 1992-ல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சேர்வலாறு பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

4 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரம்
 


திருநெல்வேலி, தூத்துக்குடி, விருது நகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் சுமார் 75 லட்சம் பேருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது தாமிரபரணி. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர், குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. திருநெல்வேலி மாநகராட்சியில் மட்டும் சுமார் ஐந்து லட்சம் மக்களின் தாகம் தீர்க்கிறது நதி. நகரில் மொத்தம் 12 தலைமை நீரேற்று நிலையங்களில் 46 நீர் உறிஞ்சு கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.
வண்ணாரப்பேட்டை வந்த கதை
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையின் முந்தைய பெயர் குஷ்டந்தீர்ந்ததுறை என்பதாகும். இதுகுறித்து ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் முனைவர் வே. மாணிக்கம் கூறும்போது, “புதுமைப்பித்தன்விநாயகர் சதுர்த்திஎன்று ஒரு கதை எழுதினார். அதில், தான் பிறந்த ஊருக்கு வண்ணாரப்பேட்டை என்று பெயர் வந்த காரணத்தை எழுதியிருப்பார். “...கும்பனிக்காரன் வந்த புதுசு, அந்தக் காலத்திலே சுலோசன முதலியார் பாலம் கட்டலே, நம் சாலை தெருதான் செப்பரை வரைக்கும் செல்லும். அங்கேதான் ஆற்றை கடக்க வேண்டும்.
கொக்கிரகுளத்தில் இப்போது கச்சேரி இருக்கே அங்கேதான் கும்பினியார் சரக்குகளை பிடித்துப் போடுமிடம். அந்த வட்டாரத்திலே நெசவும் பாய் முடைகிறதும் ரொம்பப் பிரபலம். அப்பொழுது இருநூறு வண்ணார்களை குடியேற்றி வைத்தான் கும்பனிக்காரன். அதன்பிறகு குஷ்டந்தீர்ந்ததுறை வண்ணாரப்பேட்டை என்று ஆயிற்றுஎன்று எழுதியிருப்பார்.
திருநெல்வேலியில் தாமிரபரணியின் நீராடும் துறைகளின் அடிப்படையில் கருப்பந்துறை, குறுக்குத்துறை, சிந்துபூந்துறை என்று பல ஊர்கள் அமைந்துள்ளன. புதுமைப்பித்தன் குறிப்பிடும் குஷ்டந்தீர்ந்த துறை ஆற்றங்கரையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலின் பின்பக்கம் அமைந்துள்ளது. அந்தக் கோயிலில் குட்டத்துறை சுப்பிரமணியசாமி திருக்கோயில் என்று எழுதியிருப்பதை காணலாம்.
குஷ்டந்தீர்ந்த துறை என்பதன் திரிபு இது. குட்டம் என்பது ஒருவகை தோல் நோய். தாமிரபரணி ஆற்றில் உள்ள மீன்கள் தோல் நோயைப் போக்குபவை. அக்காலத்தில் சிரங்கு நோய்க்கு தீர்வு ஆற்றுநீரில் சிறிதுநேரம் நிறுத்தி வைப்பதுதான்என்றார்.

தாமிரபரணி: தண்ணீர் உறிஞ்சும் ஆலைகளால் தடுமாறும் விவசாயம்

 

தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் விவசாயம், குடிநீர் தேவை களுக்கே போதுமானதாக இல்லை. இந்த நிலையில் தொழிற்சாலைகளுக் கும் குறைந்த விலையில் தண்ணீர் வழங் கப்படுகிறது. இதுதொடர்பான பிரச்சி னைகள் தொடர்கதையாக நீள்கின்றன.
தாமிரபரணியில் இருந்து தொழிற் சாலைகளுக்குத் தண்ணீர் எடுப்பதால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடி இழப்பு ஏற்படுகிறது என்கிறார்கள் விவசாயிகள். தாமிரபரணி தண் ணீரை தூத்துக்குடி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஸ்ரீவைகுண் டம் அணை வடகால் மூலம் வழங்கு வதற்காக 1970-ம் ஆண்டு ரூ.4.70 கோடியில் 20 எம்.ஜி.டி. திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் கனஅடி தண்ணீர், ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகாலில் இருந்து தூத்துக்குடி பகுதியில் 8 தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
 


தொழிற்சாலைகளுக்கு செல்லும் தண்ணீர்
 
இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 35 ஆண்டுகளாக கார் சாகுபடிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. முன்கார் சாகுபடியும், பிசான சாகுபடிக்கும் கூட தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த இரு ஆண்டுக்கு முன்பு விவசாயிகளின் எதிர்ப்புகளையும் மீறி மேற்கண்ட திட்டம் 23 எம்.ஜி.டி. திட்டமாக விரிவு செய்யப்பட்டு அணை தண்ணீர் எடுக்கப்படுகிறது.
தாமிரபரணி நதி நீர் உரிமை, பொதுப் பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்புக்கே சொந்தம். இங்கி ருந்து தண்ணீர் எடுக்க பொதுப்பணித் துறையுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். ஆனால், அந்தத் திட்டத்துக்கு எந்தவித ஒப்பந்தமும் செய்யாமல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கடந்த 40 ஆண்டுகளாக தண்ணீர் எடுத்து வருகிறது என்கிறார்கள் விவசாயி கள். 1,000 லிட்டரை 50 பைசா வீதம் விலைக்கு வாங்கும் குடிநீர் வடிகால் வாரியம், அதனை சுத்திகரித்து தொழிற் சாலைகளுக்கு 1,000 லிட்டருக்கு ரூ. 15 வீதம் விற்பனை செய்கிறது. ஒரு நாளைக்கு 20 மில்லியன் காலன் லிட்டர் வீதம் ஆண்டுக்கு 3,31,85,800 கனமீட்டர் என ஆண்டுக்கு ரூ.1,65,92,300-க்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த வகையில் பொதுப்பணித் துறைக்கு சுமார் ரூ. 83 கோடி வரை தமிழ்நாடு குடிநீர் வாரியம் பாக்கி செலுத்த வேண்டியிருக்கிறது.
சென்னையில் கடல் நீரை குடிநீராக்கி 1,000 லிட்டர் தண்ணீர் ரூ.49 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் அரசுக்கு ரூ.100 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது என்கிறார்கள் விவசாயிகள்.
தொழிற்சாலைகள் தரப்பில் பேசிய வர்கள், “இந்தப் பகுதியில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் செயல் படுத்தப்படவுள்ளது. இதற்காக அரசு நிதி ஒதுக்கிவிட்டது. நிலம் தேர்வு செய்யும் பணிகள் நடக்கின்றன. எனவே விரைவில் பிரச்சினைக்கு தீர்வு ஏற் படும்என்கிறார்கள்.


                                                                                                          இன்னும்  ஓடுவாள்

Thursday 17 December 2015

தமிழகத்தின் சொத்து தாமிரபரணி 12 - {நமது தாமிரபரணி நதியின் வரலாறு மற்றும் அதன் அழிவுப்பாதை பற்றிய தொடர் }

முந்தைய பாகம்-11 ற்கு லிங்க்
 
http://gowthamthamizhan.blogspot.in/2015/12/11.html
 
தொடர்-12


வாழ்வோடு பிணைந்த மணல்வெளி

இந்த மணல் பரப்பை தங்கள் உயிரென கருதுகிறார்கள் கொங்கராயகுறிச்சி கிராம மக்கள். தென்மாவட்ட சாதி மோதலின் தாக்கம் இங்கே இல்லை. கிராமத்தின் முக்கியத் தொழில் விவசாயம். ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி நாளில் கருங்குளம் பெருமாள் கோயிலில் இருந்து மணல் பரப்புக்கு சுவாமி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எடுத்து வரப்படுகிறார். அதிகாலையில் ஆற்றில் மீன் பிடித் திருவிழா நடக்கிறது. தவிர, தினசரி மக்கள் குடும்பத்தோடு கூடும் பொழுதுபோக்கு இடமாகவும் இது திகழ்கிறது. இப்படி சுற்றுவட்டார பகுதி மக்களின் வாழ்க்கையோடும், வழிபாட்டு உணர்வுகளுடனும் ஆற்று மணல் பரப்பு பிணைந்திருக்கிறது.
இந்த மணல் பரப்பு மணல் மாபியாக்களின் கண்ணை உறுத்தியது. அதை வாரி எடுக்க திட்டமிட்டவர்களுக்கு அப்பகுதி மக்கள் சிம்மசொப்பனமாக திகழ்ந்தனர். கடந்த 15 ஆண்டுகளாக மணல் கொள்ளையை தடுக்க ஏராளமான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். திருநெல்வேலியிலுள்ள பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சென்னை தலைமை செயலகம் என்று பல்வேறு மணலைக் காக்க இப்பகுதி மக்கள் ஏறாத இடங்கள் இல்லை.
போராட்டங்களுக்கான மொத்த செலவையும் கிராமத்திலுள்ள ஒவ்வொரு குடும்பமும் பகிர்ந்து கொண்டன. சென்னையில் 20.9.2005 அன்று இவர்கள் நடத்திய சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்துக்குப் பின்னர்தான் மணல் அள்ளும் பிரச்னை தீர்வை நோக்கி நகர்ந்தது


நீதிமன்றத்தால் கிடைத்த வெற்றி
 
நீதிமன்றத்திலும் தாமிபரணி மணல் கொள்ளை எதிரொலித்தது. தோழப்பன்பண்ணையில் ஆற்று மணல் குவாரி மூலம் அத்துமீறி மணல் அள்ளும் பிரச்சினையை நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் எடுத்துரைத்து வாதிட்டார் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு. நீதிகேட்டு நடந்த போராட்டத்தில் அவர் வெற்றியும் பெற்றார். நீதிமன்ற உத்தரவின்படி, தாமிரபரணி முழுக்க ஆற்று மணலை அள்ளுவதற்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக தடை நீடிக்கிறது. இதன்மூலம் தமிழகத்தின் அடையாளமாகிப்போன தாமிரபரணி பாதுகாக்கப்பட்டுள்ளது.
மணல் அள்ளும் தடையை தொடர்ந்து நீட்டிப்பு செய்ய நீதிமன்றத்தை தொடர்ந்து நாடவும் கொங்கராயக்குறிச்சி மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஆழ்வார்கற்குளம், கருங்குளம், சேரகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் தண்ணீர் பம்ப் செய்ய ஆற்றங்கரையில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. உறைகிணறு அமைந்துள்ள பகுதியையொட்டி குறிப்பிட்ட தூரத்துக்கு மணல் அள்ள அனுமதிக்க கூடாது என்பது சட்டம்.
மணல் அள்ளும் பிரச்சினையின் நீட்சியாக இப்பகுதியில் இருவேறு நபர்கள் கொலை செய்யப்பட்டதால் கிராமத்தில் எப்போதும் போலீஸ் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளது.
மணல் அள்ளும் பிரச்னை வந்துவிடக்கூடாது, எந்த அசம்பாவிதங்களும் நிகழக்கூடாது என்று அவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். மணல் அள்ளுவதை தடுத்து சாதித்துள்ள இம்மக்களின் பிரதிநிதியான கொங்கராயக்குறிச்சி ஊராட்சி தலைவர் எஸ்.ஜாகீர் உசேனி, ‘தி இந்துவிடம் கூறும்போது, “இந்தப் பகுதியில் 40 அடியில் சுத்தமான நிலத்தடி நீர் கிடைக்கிறது. காரணம், ஆற்றின் மணல்வெளி. இங்கே மணல் அள்ளினால் நீர்மட்டம் அதல பாதாளத்துக்குச் செல்லும். பெரும் பள்ளங்களால் குளிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ஆற்றுமணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். இனியும் மணல் அள்ள அனுமதி அளிக்கமாட்டோம்என்றார் உறுதியுடன். இந்த உறுதி நிச்சயம் நதியை காக்கும் என்றே நம்பலாம்.

தாமிரபரணி: மணல் திருட்டால் ஆற்றில் உருவான மரணப் பள்ளங்கள்

மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் நதியின் வலி வேதனையானது. தாமிரபரணி ஆற்றில் பல இடங்களில் காணப்படும் பள்ளங்களால், இயற்கையான ஊற்று நீரின் அளவும் குறைந்துவிட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி கரையோரத்தில் ஐந்தாண் டுகளுக்கு முன்பு 13 குவாரிகள் மூலம் மணல் அள்ள அனுமதிக்கப்பட்டது. ராட்சத இயந்திரங்களின் பேராசைக் கரங்கள் தாய் மடியைக் கிழித்தன. ஆயிரமாயிரம் லாரிகளில் தாய் மண்ணை பிற மாநிலங்களில் விற்றார்கள். இதனைத் தடுக்க நதியைப் போலவே திராணியற்று தவித்தார்கள் மக்கள்.
ஆற்று நீரோட்டம் மாறிப்போனது. மணல் அள்ளிய பள்ளங்களில் சீமை கருவேலம் வளர்ந்து மேடாகிப்போனது. மணல் மாஃபியாக்களின் போட்டியில் 25-க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். மணல் கொள்ளை சமூதாய மோதல்களையும் உருவாக்கியது. நூற்றுக்கும் மேற் பட்டோர் இந்த மோதல்களில் உயிரிழந்தனர். காலம் காலமாக கவலை யின்றி குளித்த ஆற்றில் பெரும் செயற்கை பள்ளங்களும் அபாயச் நீர்ச் சுழல்களும் உருவாகின. இதில் சிக்கி சுமார் 30 பேர் இறந்தனர்.
 


ஐந்தாண்டுகளுக்குத் தடை
 
ஒருகட்டத்தில் தோழப்பன்பண்ணை பகுதியில் ஆற்றுமணல் அள்ள அனு மதிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப் பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்ல கண்ணு நீதிமன்றத்தில் ஆஜராகி, “ஆற்றில் மணலை அள்ளுவதற்கான நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் 54,417 யூனிட் மணல் மட்டுமே எடுக்க வேண்டும். ஆனால், 65,000 யூனிட் மணல் எடுக்கப்பட்டுள்ளதுஎன்று வாதிட்டார். இதனைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி நீதிமன்றம், தாமிரபரணியில் மணல் அள்ள ஐந்தாண்டுகளுக்கு தடை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தடை வரும் டிசம்பர் 2-ம் தேதியுடன் காலாவதியாகிறது. இப்போது மீண்டும் மணலை அள்ள திட்டமிட்டு வரு கிறார்கள் அதிகார பலமிக்கவர்கள். ஆனால், நீதிமன்றத்தை நாடி தடையை நீட்டிப்போம் என்கிறார்கள் மக்கள்.