Friday 4 December 2015

தமிழகத்தின் சொத்து தாமிரபரணி 6 - {நமது தாமிரபரணி நதியின் வரலாறு மற்றும் அதன் அழிவுப்பாதை பற்றிய தொடர் }

முந்தைய பாகம்-5 ற்கு லிங்க்

http://gowthamthamizhan.blogspot.in/2015/12/5.html

தொடர்-6


நதியின் மொத்த நீர் எவ்வளவு?
நதியின் வடிநிலப்பகுதியின் மொத்த நிலத்தடி நீர் இருப்பு 744.19 மில்லியன் கன மீட்டர். நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை மூலம் கிடைக்கும் தண்ணீர் அளவு 1,375.36 மில்லியன் கன மீட்டர். ஆக, மொத்த நீர் ஆதாரம் 2119.55 மில்லியன் கன மீட்டர். இதில் விவசாயத்துக்கு 2,645.00 மில்லியன் கன மீட்டர்; வீட்டு உபயோகத்துக்கு 48.72 மில்லியன் கன மீட்டர்; தொழிற்சாலை உபயோகத்துக்கு 32.98 மில்லியன் கன மீட்டர்; கால்நடை, மீன் வளர்ப்பு மற்றும் இதர உபயோகங்களுக்கு 21.32 மில்லியன் கன மீட்டர் என மொத்தம் 2,748.02 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
ஆக, மொத்த நீர் பற்றாக்குறை 628.47 மில்லியன் கன மீட்டர். இந்தப் பற்றாக்குறையை நதியை மேலும் சிறப்பாக பாதுகாப்பது, அணைகளை தூர் வாருவது, போன்ற நீர் மேலாண்மைத் திட்டங்கள் மூலம் சரி செய்து, உபரி நீரையும் பெற முடியும்.
அருமருந்தான ஆற்று நீர்
பனித்துளி தொடங்கி மழை நீர், கிணற்று நீர், ஆற்று நீர்,கடல் நீர் என ஒவ்வொரு நீருக்கும் பிரத்தியேக குணம் இருக்கிறது என்கிறது சித்த மருத்துவ நூலானநோயில்லா நெறி மற்றும் பதார்த்த குண சிந்தாமணி’. அது தாமிரவருணியின் நீரை,
தாம்பிரவாற் றுப்புனலால் சுரமும் பித்துவிழித்
தும்பிரமுட் காய்ச்சல் சுவாச நோய் - சோம்பிமிகக்
கக்குகய மென்புருக்கி கைகா லெரிவடனே
மிக்குறுதா கங்களும்போம் விள்
- என்று குறிப்பிடுகிறது.
தாமிரவருணியின் நீர், எல்லாவகைக் காய்ச்சல், பித்ததோஷம், கண் புகைச்சல், உள்சுரம், சுவாச ரோகம், கக்குவான், என்புருக்கி, கை, கால் எரிச்சல், மிகுந்த நீர் வேட்கை இவைகளை தீர்க்கும் என்பது அதன் பொருள்.
தாமிரபரணி: ஆற்றை காத்த ஆங்கிலேய அதிகாரிகள்

கவுதலை ஆறு
திருநெல்வேலி நகரத்திலிருந்து ஆற்றுடன் பயணிக்கும் முன்பு கடந்த காலங்களில் ஆற்றுக்கு நேர்ந்த அபாயங்களையும் அவற்றிலிருந்து ஆற்றை மீட்ட வரலாற்றையும் பார்ப்போம். 1800-களில் திருநெல்வேலி சுற்றுவட்டார வனப்பகுதிகளில் தேவியாறு, கோட்டமலையாறு, குளிராடையாறு, விருசடைகிடையாறு, சிற்றாறு, ஜம்புநதி, ராமநதி, கல்லாறு, கருணையாறு, கோரையாறு, சேர்வலாறு, காரையாறு, மணிமுத்தாறு, தாமிரபரணி ஆகிய ஆறுகள் ஓடியதாக குறிப்பிடுகிறது வனத்துறை பதிவுகள். தாமிரபரணி மூலம் அப்போது 1,69,549 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன.(இன்று 86,107 ஏக்கர்).
1795 - 1800 காலகட்டத்தில்தான் தாமிரபரணி ஓடும் வனங்களில் ஜாதிக்காய், கிராம்பு, பட்டை பயிரிடப்பட்டன. அவை வணிக ரீதியாக லாபம் தராததால் காபி, தேயிலை, கோகோ பயிரிடப்பட்டன. காபி, தேயிலையை பயிரிட 730.63 ஏக்கர் காடுகள் தனியாரிடம் ரூ.9841-க்கு அளிக்கப்பட்டன. இதில் உருவானவைதான் ஊஞ்சல்கட்டி, ராமக்கல்தேரி, தெற்குமலை, குளிராட்டி உள்ளிட்ட தனியார் எஸ்டேட்கள். இப்படியாக தொடர்ந்து சோலைக்காடுகள் உள்ளிட்ட காடுகள் அழிக்கப்பட்டன. இதனால், சுமார் 40 ஆண்டுகளில் தாமிரபரணியின் நீர் வரத்து பாதியாக குறைந்தது.
இந்த நிலையில்தான், முதன்முதலில் 1842-ம் ஆண்டு அன்றைய திருநெல்வேலி ஆட்சியர் ஹெச். மாண்ட்கோமெரி (H.Montgomery) மரங்களை வெட்ட தடை விதித்தார். அடிப்படை தேவைகளுக்காக மூங்கில் உள்ளிட்ட சிறு மரங்களை வெட்ட ஐந்து அணா உரிமை வரி விதிக்கப்பட்டது. தவிர, ஒரு கை வண்டி சுமைக்கு மூன்று பைசா, காளை வண்டி சுமைக்கு ஒரு அணா வரி விதிக்கப்பட்டது

நதி மூலத்தை காத்தமெக் கிரிகார்
இதற்கிடையே மேற்குத் தொடர்ச்சி மலையில் தாமிரபரணி கரையோரம் விளைந்த காபி மற்றும் தேயிலை, அதன் சுவை காரணமாக உலகளவில் பிரசித்தி பெற்றது. நாட்டின் மற்ற பகுதிகளில் விளைந்த காபி, தேயிலையை விட இதற்கு கூடுதல் விலை கிடைத்தது. இதனால், ஒருகட்டத்தில் தாமிரபரணியின் நதிமூலத்துக்கே ஆபத்து ஏற்பட்டது. 1865-ல் பல்வேறு ஐரோப்பிய காபி நிறுவனங்கள் தாமிரபரணி நதி உற்பத்தியாகும் பூங்குளம், அதற்கு சுற்றியிருக்கும் கொடமாடி, கன்னிக்கட்டி, களக்காடு வனப்பகுதிகளை விலைக்கு வாங்க முயன்றன. நிதி நெருக்கடியில் இருந்த அரசு, அதை தீவிரமாக பரிசீலித்த நிலையில், சேரன்மகாதேவியின் துணை ஆட்சியராக இருந்த மெக் கிரிகார் (Mac Gregor) இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரது உறுதியான நிலைப்பாடு காரணமாக அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டு, தாமிரபரணி நதிமூலம் காக்கப்பட்டது



                                                                                                        இன்னும்  ஓடுவாள்

 

No comments:

Post a Comment