Wednesday 2 December 2015

தமிழகத்தின் சொத்து தாமிரபரணி 5 - {நமது தாமிரபரணி நதியின் வரலாறு மற்றும் அதன் அழிவுப்பாதை பற்றிய தொடர் }



முந்தைய பாகம்-4 ற்கு லிங்க்
http://gowthamthamizhan.blogspot.in/2015/11/4-3-httpgowthamthamizhan.html 

 தொடர்-4


பூமிக்குள் சுரங்கப் பாதை
சேர்வலாறுக்கும் அணைக்கும் காரையாறு அணைக்கும் இடையே பூமிக்குள் 3.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. காரையாறு மேலணையில் தண்ணீர் அளவு 40 அடிக்கு மேல் இருந்தால் அது தானாக சுரங்கப் பாதை வழியாக சேர்வலாறு அணைக்குச் சென்றுவிடும். அதேபோல் மேலணையில் 40 அடிக்கு குறைவாக தண்ணீர் இருந்தால் சேர்வலாறு அணையில் இருந்து தண்ணீர் தானாக மேலணைக்குச் சென்றுவிடும். மேலணையும் சேர்வலாறு அணையும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பராமரிப்பில் இருக்கின்றன. மேலணையில் 4 யூனிட்கள் மூலம் 32 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மின்சார உற்பத்தி தடையில்லாமல் நடக்கவே இந்த ஏற்பாடு.
தாமிரபரணி: நெல்லை, தூத்துக்குடியின் உயிர்நாடி
நெல்லை நகரத்தில் தாமிரபரணி. | படம்:எம்.லட்சுமி அருண்.
நதிமூலம், ரிஷிமூலம் கேட்கக் கூடாது என்பார்கள். ஆறுகள் மற்றும் ரிஷிகளின்மூலம்காண்பது சிரமம் என்பதே அதன் அர்த்தம். அதேசமயம் நதிகளின் வரலாற்றை ஓரளவு அறிய முடியும். வரலாறு, இலக்கியம் மற்றும் புராணங்கள் இவை எல்லாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நதி எப்படி இருந்தது என்பதை அறிந்துக் கொள்ள உதவுகின்றன.
பெயர் காரணம்
தாமிரபரணி ஆற்றைதாமிரவருணிஎன்றும் அழைக்கிறார்கள். தாராளமாக அழைக்கலாம். தவறில்லை. வருண பகவானைபோல பொழிவதால்வருணிஎன்று வர்ணிக்கிறார்கள். இதுவேதாமிரவருணிக்கான பெயர்க் காரணம். ஆனால், வியாசரின் மகாபாரதத்திலும், வால்மீகியின் ராமாயணத்திலும், காளி தாசரின் ரகுவம்சத்திலும் இந்த நதிதாம்பிரபரணி’, ‘தாமிரபருணிஎன்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
வரலாற்று ஆய்வாளர் பிஷப் கால்டுவெல், “கி.மு. மூன்றாம் நூற் றாண்டுக்கு முன் இலங்கை தீவுதம்பர பன்னி’, ‘தாப்ர பன்னெ’, ‘தாம்ப பன்னிஎன்றெல்லாம் அழைக்கப்பட்டது. இது அசோகரின் கல்வெட்டிலும் குறிப்பிடப் பட்டுள்ளது. இலங்கையிலிருந்து இங்கு புலம் பெயர்ந்தவர்கள் அந்தப் பெயரி லேயே ஆற்றையும் அழைத்திருக்கலாம். அதுவே பிற்காலத்தில் தாமிரபரணி ஆகியிருக்கலாம்என்கிறார்.
வரலாற்று ஆய்வாளர் ஸ்டீபன் தொகுத்தபண்பாடு வேர்களைத் தேடிவரலாற்றுப் புத்தகத்தில், “குமரியைக் கடல் கொள்ளும் முன்பு மேற்குத் தொடர்ச்சி மலை இலங்கை வரை நீண்டிருந்தது. அதிலிருந்த பொதிகை மலைதான் உலகில் முதலில் தோன்றிய மலை. முதல் உயிர் தோன்றியதும் பொதிகையில்தான். தற்போதும் இலங்கையில் உள்ள ஆதாம் மலையில் முதல் மனிதனின் பாதம் இருப்பதாக நம்பிக்கை நிலவுகிறது.” என்று தாமிரபரணிக்கும் இலங்கைக்குமான தொடர்புகளை குறிப்பிட்டுள்ளார்.
இலக்கியங்களில் தாமிரபரணி
சங்க இலக்கியங்கள் தாமிரபரணியைதன் பொருநை’, ‘பொருநைஎன்கின்றன. தாமிரபரணி நதிக்கரையில் பிறந்த நம்மாழ்வார் தனது திருவாய்மொழியில் தாமிரபரணியைதன்பொருநல்’, ‘வண்பொருநல்என்கிறார். சிலப்பதி காரம் சேரனை,‘பொருநை பொறையன்என்று போற்றுகிறது. பெரிய புராணத்தில் சேக்கிழார் பாண்டிய நாட்டைதன்பொருநைப்புனல் நாடுஎன்கிறார்.
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை திருநதிஎன்கிறார் கம்பர். ‘அழகர் கருணைப்போல பொருநை பெருகிவரும் அழகைப் பாரும் பள்ளீரேஎன்கிறது முக்கூடற்பள்ளு. ‘தமிழ் கண்டது வைகையும் பொருநையும்என்கிறார் பாரதியார். முதல் ராஜராஜன் காலமான 1013-ம் வருடம் வெட்டப்பட்ட கல்வெட்டு, தாமிரபரணியில் சிற்றாறு (சித்ரா நதி) கலக்கும் இடத்தில் தாமிர பரணியைதன் பொருந்தம்என்று குறிப் பிடுகிறது. தாமிரம் என்றால் செம்பு. தாமி ரக் கனிமம் கலந்த தண்ணீர் என்பதால் தாமிரபரணி பெயர் வந்திருக்கலாம்
நெல்லை, தூத்துகுடியில் தாமிரபரணி
தாமிரபரணி நதியில் எட்டு நீர்த்தேக் கங்கள், அவற்றில் 11 கால்வாய்கள் இருக்கின்றன. மலையில் ஏழு துணை ஆறுகளும், சமவெளியில் ஐந்து துணை ஆறுகளும் மொத்தம் 12 துணை ஆறுகள் தாமிரபரணியுடன் கலக்கின்றன. தோன்றுமிடம் தொடங்கி தூத்துகுடி மாவட்டம், புன்னைக்காயல் வரை 120 கி.மீ. பயணித்து மன்னார் வளகுடாவில் கலக்கிறது.
தாமிரபரணி நதியின் வடிநிலத்தில் சராசரி ஆண்டு மழையளவு 1082 மி.மீ. நதியின் மொத்த வடிநிலப்பரப்பு 5,969 சதுர கி.மீ. இதில் 5,317 கி.மீ. (89%) திருநெல்வேலி மாவட்டத்திலும் 652 சதுர கி.மீ. (11%) தூத்துக்குடி மாவட்டத்திலும் இருக்கிறது. திருநெல் வேலி மாவட்டத்தின் மொத்த நிலப்பரப் பான 6,780 சதுர கி.மீட்டரில் தாமிரபரணி யின் வடிநிலப்பரப்பு மட்டும் 78 %. தூத் துக்குடி மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பான 4,649 சதுர கி.மீட்டரில் நதியின் வடிநிலப்பரப்பு 14 %. இந்த வடிநிலப்பகுதிகளில் இருக்கும் கிணறு களின் எண்ணிக்கை 71,064. குளங்களின் எண்ணிக்கை 1,300. குளங்களின் நீர் கொள்ளளவு 196 மில்லியன் கன மீட்டர்.
தாமிரபரணி நதியால் திருநெல்வேலி யில் 40,000 ஏக்கர், தூத்துக்குடியில் 46,107 ஏக்கர் என 86,107 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. அக்டோபர் 15-ம் தேதி முதல் மார்ச் இறுதி வரை வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் பயிரிடும் முறையை பிசான சாகுபடி என்கிறார்கள். ஜூன் 15-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ம் தேதி வரை தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் பயிரிடும் முறையை கார் சாகுபடி என்கிறார்கள். கார் சாகுபடியில் 86 % நெல் பயிரிடுகிறார்கள். தவிர, நதியின் கடைப் பகுதியான மருதூர் மற்றும் வைகுண்டம் அணைக்கட்டுகளின் கீழ் பகுதிகளில் இரு போக பாசனப் பகுதியில் பழந்தொழி என்கிற சிறப்பு சாகுபடி தண்ணீர் இருப்பைப் பொறுத்து ஏப்ரல், மே மாதங்களில் நடக்கும்


                                                                                                             இன்னும் ஓடுவாள்

No comments:

Post a Comment