Tuesday 17 November 2015

என் கல்லூரிக்காலக் கவிதை...!

உன் முகம் பார்க்க ஒரு நொடி கிடைக்காதா 
என்று ஏங்கிய காலங்கள் என் நினைவில் வருகிறது.

நீ பூ சூடும் பழக்கம் இல்லாதவள்
இது எனக்கு தெரியும் மலர்களுக்கு எப்படி தெரியும்
நீ சூடமல் போவதற்கு காரணம் ,
தாங்கள் அழகாக இல்லையோ என்று நினைத்து நினைத்து 
உன் வீட்டில் நீ வளர்க்கும் பூச்செடிகள் அழுகின்றனவே!!!!
அது உன் கண்களுக்கு தெரிய வில்லையா??

நீ பூ சூடினால் “அவ்வளவு அழகாக இருக்கும்…!!!”
என் தேவதையே நான் உன்னை சொல்ல வில்லை பூவைச் சொன்னேன்.
ஏன் என்று கேட்கிறாயா..??
அழகு குறைவாக இருப்பது பூ தானே….!!!!

உனக்கு அருகில் இருந்தாலும் , 
தொடாமல் இருக்க ஆசை எனக்கு ,

தாய் மொத்தமாக சென்றாள் என்னை விட்டு ,
8 வயதில்…
அதிகமாய் வலித்தது.
தந்தையை பிரிந்தேன் 10 வயதில்
வலிக்கவில்லை.
கல்லூரியில் உன்னை பிரிந்தேன் 
அதிகமாய் வலித்தது…
அப்படி என்றால் நீ என் தாய் தானே…

உன் கை பிடித்து ,
அக்னியை சாட்சியாய் வைத்து ,
சுற்றி வர வேண்டும் என நித்தம் நித்தம் கனவு கண்டேன்…

நீ நெற்றியில் இடும் திலகம் 
நான் இட்டதாகத் தான் இருக்க வேண்டும்.... 
இது ஆண்டவனிடம் நான் வேண்டிக் கொண்டது …

உலகில் உள்ள செல்வங்கள் அனைத்தையும் கொடுத்திருந்தாலும் ,
ஆண்டவனுக்கு நன்றி மட்டுமே சொல்லி இருப்பேன்..
உன்னை கொடுத்தான் பார்த்தாயா???
 அதற்கு என்னையே கொடுத்தாலும் தகும்..

தவறிழைக்கும் பழக்கம் 
அதிகம் உள்ளவன் நான்
நான் செய்த தவறில் பெரியது எது 
என்று சொல்லத் தெரியவில்லை
ஆனால் ஒன்று தெரியும் 
வாழ்க்கையில் நான் செய்யப் போகும் , மற்றும் செய்த
மிக அருமையான ,
மிக அழகான ,
மிகவும் பவித்ரமான செயல்
உன்னை கண் கலங்காமல் பார்த்துக் கொள்வது

எதுவும் பெரிய சாதனைகள் நான் செய்திட வில்லை இதுவரை…
உன்னைப் பெற்றதை விட…
ஆனால்,,,
இனியும் ஏதாவது சாதனை செய்திட வேண்டுமா என்றால்
சொல்வேன் உனக்கு என் உயிரைத்தர வேண்டும் என்று…

தகிக்கும் மணலில் நடந்திருக்கிறேன்,
உறைய வைக்கும் பனியில் அமர்ந்திருக்கிறேன்…
சோ வெனப் பெய்யும் மழையில் குளித்திருக்கிறேன்…
காற்றில் மிதந்திருக்கிறேன் மது அருந்திய போதையில்…
எனக்கு தெரிந்து இது எல்லாம் தனித்தனியாகத்தான்
உன் கரத்தை முதன் முறையாக பற்றினேன் நினைவிருக்கிறதா…?

அன்று நடந்ததடி இது அனைத்தும் ஒரே நொடியில் மொத்தமாக..
அழுதே விட்டேன் அந்த சமயத்தில்…
ஆனந்தத்தின் உச்சம் இது தானோ என்று…


காமம் சற்றும் இல்லாமல் காதல் செய்ய முடியுமா????
முடியும்....
நான் காதலிப்பது நீயாக இருந்தால்…
காமத்துக்கும் காதலுக்கும் ஒரு சிறிய கோடு உண்டு…
காதலில் உச்சம் அடைந்து கல்யாணத்திற்கு பின்னர் 
கூடி, 
இன்புற்று , 
இதுவரை இருந்த காதலை அதன் பின்னர் 
ஆயிரம் மடங்காக அதிகரிப்பது
உண்மையான காதல்…
நான் உன் மீது கொண்டதைப்போல..
கல்யாணத்திற்கு முன்னாலாயே அவசரப்பட்டு 
தற்காலிக அன்பை பகிர்ந்து 
வெறும் காமத்திற்கு இடம் கொடுப்பது காதலா…??
அதற்கு பெயர் வேறு உண்டு

உன் கண்கள்…
அப்பப்பா...!!! 
அது கண்களா…???
என்னை கொல்கிற வேகத்தை பார்த்தால் அப்படித் தெரியவில்லை
துப்பாக்கியிலிருந்து வரும் தோட்டவை விட உனது விழிகள் 
வேகமாக வருகிறதடி என்னைத் தாக்க
ஆனால் அதிலிருந்து தப்பிச் செல்ல என் மனம் மறுக்கிறது…
நான் அறிவாளியாம் 
என் தங்கை சொல்கிறாள்..
நான் நேர்மரை சிந்தனையாளனாம்.... 
என்னை ஒத்த கருத்துடையவன் சொன்னான்
நான் நல்லவனாம்..
என் அண்ணனின் மனைவி (அண்ணி) சொல்கிறார்கள்…
நான் அருமயான பேச்சாளனாம்…
என் பேச்சை கேட்டவர்கள் சொல்கிறார்கள்..



அவர்களுக்கு எல்லாம் தெரியவில்லை
நான் உன் முன்னால் நிற்கும் போது
அறிவில்லாமல் நடக்கிறேன்,
எதிர்மறையாக சிந்திக்கிறேன்,
கெட்டவனாக மாறுகிறேன்,
பேச தெரியாமல் விழிக்கிறேன்,

என்று…..!!!!

எனக்குப் பலமுறை தோன்றி இருக்கிறது 
இந்த இரண்டில் எது நிஜம் 
உன் முன்னால் நான் நடந்து கொள்வது நிஜமா..???
இல்லை மற்றவர்கள் கண்களுக்கு நான் தெரிவது நிஜமா…??
தெரியவில்லை…. 

பெருகி வரும் காட்டாற்று வெள்ளத்தை 
தடுப்பதை விடக்கடினம் 
உன் முன்னால் நிற்கும் போது 
பெருகி வரும் என் காதலை நான் தடுப்பது…
ஆனால் செய்தேனே....!!!
வருடக்கணக்காய் செய்தேனே...!!!

பனிக்காலத்தில் , அதிகாலையில் மலரும் பூக்களை விட
அந்த பனித்துளிகளை சுமக்கும் 
தளிர்களுக்கு அழகு அதிகம்….
உன் கண்கள் கலங்கி இருக்கும் போது எனக்கு அந்த
குளிர்காலத் தளிர்கள் தான் நினைவுக்கு வருகின்றது…

நான் மறித்தாலும் மறவாமல் இருக்க வேண்டும் உன்னை..
என்ன செய்யலாம் அதற்கு…?
பச்சை குத்தினால் தீயில் என்னை சூடும் போது கருகி விடும்
கல்லறையில் உன் பெயரை பொறித்தால் 
காலப்போக்கில் அழிந்து விடும்
உன் நினைவாய் உயிரில் எழுத விழைகிறேன்…
உன்னை காதலித்து கைப்பிடித்து வாழ்க்கையில் இன்ப துன்பங்களை
உன்னோடு பகிர்ந்து கொண்ட நினைவுகளை
அழியாமல் பாதுகாக்க வேண்டும்
அப்போது தான் மரணத்திலும்,
அதற்கு பின்னும் உன் நினைவுகளை மட்டும் சுமந்து 
காதலுடன் இருக்க முடியும்
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்…..!!


---இப்படிக்கு உன் கண்ணாளன்....
    
    கோமறை

1 comment: