Tuesday 17 November 2015

சாதாரண பேருந்துப் பயணத்தில் இவ்வளவு உண்டா...!

ஆயிரம் முறை ஏறி இருக்கிறேன் இதே பேருந்தில்
புதிதாய் எதுவும் இருந்ததில்லை...
ஆனால் நீ ஏறிய அந்த நொடி இன்னும் எனக்கு மறக்கவில்லை.
புத்தகப்பையை நீ தோளில் மாட்டி, ஒற்றைக் கையில் பேருந்தின் பிடியைப்பற்றி,
இன்னொரு கையை நீ அசைத்துப் பேசும் போது....
அப்பப்பா...
கவிஞணும் திகைப்பானடி அதை வர்ணிக்க முடியாமல் 
நான் எங்கே நிற்கிறேன் என்று தெரியாமல் திக்குமுக்காடிப் போனேன் அன்று.

நீ உன் தோழியிடம் பேசும் போது, உன் சிரிப்பை 
கைக்குட்டையால் மறைக்கும் போது தெரியும் உன் வெட்கம்...
ஹா...
அழகியடி நீ..

நான் பார்க்கிறேன் என்று தெரிந்தும் என்னைப் பார்க்காமல்
இருப்பது அழகு..
நான் பார்க்காத போது நீ என்னை ஓரக்கண்ணால் பார்த்து 
ரசிப்பது அழகு..
 
 
 
நான் தவிக்கிறேன் என்று உனக்கு தெரிந்ததும் ஒரு நாள்
நீயே வந்து என்னிடம் பேசியது...
நீ பேசியதும் எனக்கு உள்ளூர பொங்கி வந்த ஆனந்தம்..
எப்போது தான் மாலை 5.30மணி ஆகும் என்று 
நாள் முழுக்க காத்திருந்தது..
நீ ஏறாத அல்லது வராத நாளில் பேருந்தே வெறுமையாய் ஆனது..
நீ ஏறும் போது உனக்குப் பாதுகாப்பாய் நான் அருகில் நிற்க 
ஆசைப்பட்டது...
நீ இறங்கும் போது உனக்கு வழி விடச்சொல்லி என் நண்பர்களை
.மிரட்டியது.. 

என்னுடைய அந்த ஒன்றரை மணி பயணத்தில் 
நீ இருக்கும் அந்த 15 நிமிடம் மட்டும் அதிகரிக்க கூடாதா என்று 
ஏங்கியது..

நீ இறங்கும் போது "Bye " என்று சொல்வாய் அப்போது சிரிப்புடன்
நானும் பதிலுக்கு "Bye" அன்று கையை அசைப்பேன்
அதற்கு பிறகு வீடு சென்று சேரும் வரை அந்த சிரிப்பு 
தொடர்ந்தது..

எதற்காக அந்த சிரிப்பு...?
எதனால் அந்த சிரிப்பு என்று
யோசித்தது..

கண்ணால் இயற்கை அழகை ரசித்துக்கொண்டும் 
மனதால் உன்னை ரசித்துக் கொண்டும்
பேருந்தில் என் வீடு வரை
பயணித்தது..

கல்லூரியின் கடைசி நாட்களில் நான் இழந்தவைகளை
பட்டியலிட்ட போது முதலில் 
அந்தப் பேருந்து பயணமும்,
உன் முகமும் 
தான் முதலில் நினைவில் வந்தது..

No comments:

Post a Comment